/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பத்தாம் வகுப்பு மாணவர் துாக்கிட்டு தற்கொலை
/
பத்தாம் வகுப்பு மாணவர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : பிப் 15, 2024 04:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய பத்தாம் வகுப்பு மாணவர் ஸ்ரீலயம் 16, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜபாளையம் லட்சுமியாபுரம் தெருவை சேர்ந்தவர் போத்தி. இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு ஸ்ரீலயம் 16, ஸ்ரீ நித்யா 16, என்ற இரட்டை குழந்தைகளும் ,மகரிஷி 8, என்ற மகளும் உள்ளனர்.
ஸ்ரீலயம் ராஜபாளையம் தனியார் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்டு இறப்பிற்கான காரணம் குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

