/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காங்., மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து 12 பேர் காயம்
/
காங்., மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து 12 பேர் காயம்
காங்., மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து 12 பேர் காயம்
காங்., மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து 12 பேர் காயம்
ADDED : செப் 08, 2025 06:18 AM
விருதுநகர் : திருநெல்வேலியில் நேற்று நடந்த காங்., மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காங்., நிர்வாகிகள் கார், வேன்களில் சென்றனர்.
கடலுார் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டசபை தொகுதியில் இருந்து காங்., எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் ஒரு வேனில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு விருதுநகர் அருகே சமத்துவபுரம் நான்கு வழிச்சாலையில் அதிகாலை சென்றனர். அப்போது ஆம்புலன்சிற்கு வழிவிடுவதற்காக லாரியின் பின்னால் சென்றனர். ஆம்புலன்ஸ் சென்ற பின் லாரி திடீரென பிரேக் பிடித்ததால் மோதாமல் இருக்க வேனை திருப்பிய போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விருத்தாச்சலத்தைச் சேர்ந்த வேல்முருகன் 52, அருணாச்சலம் 73, ராவணன் 42, செல்வ ஆனந்த் 32, பாலையா 40, முருகானந்தம் 39, ராஜா 27, வெங்கடேசன் 70, ராஜேந்திரன் 68, திருநாவுக்கரசு 72, சுப்புராயன் 70, மாரிமுத்து 78, ஆகியோர் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களை எம்.எல்.ஏ.,க்கள் ராதாகிருஷ்ணன், அசோகன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.