/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
1.5 கி.மீ.,ல் 15 வேகத்தடைகள் தினமும் வாகன ஓட்டிகள் அவதி
/
1.5 கி.மீ.,ல் 15 வேகத்தடைகள் தினமும் வாகன ஓட்டிகள் அவதி
1.5 கி.மீ.,ல் 15 வேகத்தடைகள் தினமும் வாகன ஓட்டிகள் அவதி
1.5 கி.மீ.,ல் 15 வேகத்தடைகள் தினமும் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : அக் 24, 2024 04:40 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் நகர் பகுதி மெயின் ரோடு ஒரு கி.மீ., துாரத்திற்குள் 15க்கும் மேற்பட்ட வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் தினமும் விபத்துகளை எதிர் கொள்கின்றனர்.
மதுரை ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து பஞ்சு மார்க்கெட் வழியாக ராஜபாளையம் நகருக்குள் நுழையாமல் கிழக்கு பகுதியான சத்திரப்பட்டி முதல் ஆலங்குளம் வழியிலான சஞ்சீவி மலை ஒட்டிய மலையடிப்பட்டி 60 அடி ரோடு பிரதான போக்குவரத்து பாதையாக உள்ளது.
நாள்தோறும் இப்பகுதியில் உள்ள ஸ்பின்னிங் மில்கள், விசைத்தறிகள், குடியிருப்புகள் அனைத்திற்கும் பல்வேறு பகுதிகளில் இருந்து கனரக வாகனங்கள் பஸ்கள், டூவீலர்கள் வந்து செல்கின்றன.
இந்நிலையில் ரயில்வே பீடர் ரோடு தொடக்கத்திலிருந்து சத்திரப்பட்டி ரோடு வரையிலான 1.5 கி.மீ., துாரத்திற்குள் 15 வேகத்தடைகள் அமைத்துள்ளனர். இதனால் வாகனங்களில் வேகமாக செல்லும்போது கவனம் இன்றி எதிர்கொள்ளும்போது விபத்திற்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து பழனிவேல்: 60 அடி ரோடு என்பது பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியுள்ளது. குறுகிய இந்த ரோட்டில் 15க்கும் அதிகமான வேகத்தடைகளால் தினமும் கடந்து செல்வோர் முதுகு, மூட்டு வலி உள்ளிட்ட பாதிப்புகளை சந்திப்பதுடன் வாகனங்கள் விரைந்து பழுதாகிறது.
பெரும்பாலான வேகத்தடைகளில் இதுகுறித்து ஒளிரும் எச்சரிக்கையோ வெள்ளை வர்ண பூச்சோ இல்லாததால் இரவு நேரங்களில் விபத்துகள் தொடர்கிறது.
பயணிகளும் நலன் கருதி ஆபத்துள்ள இடங்களில் மட்டும் நிறுவி தேவையற்ற தடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

