/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., பென்னிங்டன் நுாலக 150வது ஆண்டு விழா
/
ஸ்ரீவி., பென்னிங்டன் நுாலக 150வது ஆண்டு விழா
ADDED : டிச 27, 2025 06:06 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் நூலகத்தின் 150வது ஆண்டு விழா நிகழ்வுகள் நேற்று முதல் துவங்கியது.
துணைத் தலைவர் முத்து பட்டர் தலைமை வகித்தார். செயலாளர் ராதா சங்கர் முன்னிலை வகித்தார். தபால் தலை, 150வது ஆண்டு சிறப்பு மலரை வெளியிட்டு இந்திய மனித உரிமை ஆணையத் தலைவர், ஓய்வு உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசியதாவது;
நூலகங்கள் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும், நாட்டின் சமத்துவ வேள்விக்கும் உதவுகிறது. நூல்கள் வாசிப்பை மாணவர்கள் அதிகரிக்க வேண்டும். சேதமடைந்த அரிய வகை புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்கல் செய்து பாதுகாக்க வேண்டும். - என்றார்.
காவல் ஆணைய உறுப்பினர், ஓய்வு டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
மனித குல வளர்ச்சிக்கு நூலகங்கள் அவசியம். அறிவுதான் சக்தி. நூலகங்கள் தான் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளையும், நீதிபதிகளையும், பல்வேறு துறை சாதனையாளர்களையும் உருவாக்குகிறது , என்றார்.
விழாவில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராதா கிருஷ்ணன், கமிட்டி நிர்வாகிகள் ராஜாராம், சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். ஜெயக்குமார் நன்றி கூறினார்.
மாலையில் காந்தி கண்ணதாசனின் இலக்கிய விழா நடந்தது. இன்று காலை சாலமன் பாப்பையா குழுவினரின் பட்டி மன்றமும், மாலையில் நர்த்தகி நடராஜ் பரதநாட்டியமும், நாளை திருக்குறுங்குடி இராமானுஜ ஜீயர், ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோபராமானுஜ ஜீயர், செங்கோல் ஆதினம், சிவ புரா ஆதினம் பங்கேற்கின்றனர்.

