ADDED : ஏப் 08, 2026 05:31 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தின் 7 தொகுதிகளிலும் 154 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 34 மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளன.
ராஜபாளையத்தில் 39 மனுக்களும், 29 வேட்பாளர்களும், ஸ்ரீவில்லிபுத்துாரில் 26 மனுக்களுக்கு 21 வேட்பாளர்களும், சாத்துாரில் 39 மனுக்களும் 27 வேட்பாளர்களும், சிவகாசியில் 36 மனுக்களும், 29 வேட்பாளர்களும், விருதுநகரில் 29 மனுக்களும், 23 வேட்பாளர்களும், அருப்புக்கோட்டையில் 43 மனுக்களும் 31 வேட்பாளர்களும், திருச்சுழியில் 38 மனுக்களும் 29 வேட்பாளர்களும் என மாவட்டத்தில் 250 வேட்பு மனுக்களை 188 வேட்பாளர்கள் வழங்கியுள்ளனர். இதில் 154 ஏற்றுக்கொள்ளப்பட்டது. 34 தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக சிவகாசி தொகுதியில் 9 பேர் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
