ADDED : ஏப் 21, 2026 08:12 PM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை யொட்டி பதற்றமான முக்கிய ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 1009 இடங்களில் 2001 ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான ஓட்டுச்சாவடிகள் இரண்டு விதமாக பிரிக்கப்படுகின்றன. முந்தைய தேர்தல்களில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்ட ஓட்டுச்சாவடிகள் என்றும், அரசியல் ரீதியாக இரு கட்சிகள் இடையே மோதல் உருவாக வாய்ப்புள்ள, ஒரே இடத்தில் 5 ஓட்டுச்சாவடிகளுக்கு மேல் உள்ள பகுதிகள் பதற்றமானவை என பிரிக்கப்பட்டு இதனடிப்படையில் 171 பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.அட்டவணைதொகுதி/ இடம்/ பதற்றமான ஓட்டுச்சாவடிகள்
ராஜபாளையம்/ 13/ 21
ஸ்ரீவில்லிபுத்துார்/ 6/ 16
சாத்துார்/ 19/ 25
சிவகாசி/ 26/ 36
விருதுநகர்/ 16/ 18
அருப்புக்கோட்டை/ 22/ 22
திருச்சுழி/ 29/ 33
மொத்தம்/ 131/ 171
