தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ 19 வேட்பு மனுக்கள் வாபஸ் :135 வேட்பாளர்கள் போட்டி

 19 வேட்பு மனுக்கள் வாபஸ் :135 வேட்பாளர்கள் போட்டி

 19 வேட்பு மனுக்கள் வாபஸ் :135 வேட்பாளர்கள் போட்டி


ADDED : ஏப் 09, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 11:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகளில் 19 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டு, 135 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ல் துவங்கியது. இதில் 188 வேட்பாளர்கள் 250 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் ஏப். 8ல் நடந்த பரிசீலனையில் 34 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 154 வேட்பாளர்கள் மீதமிருந்தனர். இந்நிலையில் வாபஸ் பெறும் நாளான நேற்று 19 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதி வேட்பாளர்களாக ராஜபாளையத்தில் 22, ஸ்ரீவில்லிபுத்துாரில் 14, சாத்துாரில் 22, சிவகாசியில் 14, விருதுநகரில் 15, அருப்புக்கோட்டையில் 25, திருச்சுழியில் 23 என 135 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இதில் குறைான வேட்பாளர்கள் உள்ள ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகரை தவிர்த்து ராஜபாளையம், சாத்துார், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய நான்கு தொகுதிகளின் 1122 ஓட்டுச்சாவடிகளில் 438 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கூடுதல் தேவையாக உள்ளது. அதை அனுப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us