தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ 19 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

 19 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

 19 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு


ADDED : ஜன 22, 2026 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகரில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய 19 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

2025 - 26 பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்வதற்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் வத்திராயிருப்பு, கான்சாபுரம், முஷ்டக்குறிச்சி, ராமசாமியாபுரம், தம்பிப்பட்டி, தேவதானம், சேத்துார், மேட்டுப்பட்டி, சுந்தரபாண்டியம், முடுக்கன்குளம், சென்னிலைக்குடி ஆகிய இடங்களில் 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து செயல்பட்டு வருகின்றன.

அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள மேலுார் துரைச்சாமியாபுரம், அயன்கொல்லங்கொண்டான், ஜமீன்நல்லமங்களம், கோவிலுார், முகவூர், கம்மாப்பட்டி, கீழ காஞ்சிராங்குளம், ஏ.முக்குளம் ஆகிய பகுதிகளில் 8 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.

குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகம் ரூ.2545, பொது ரகம் ரூ.2500 என விவசாயிகள் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்று பயன் பெறலாம். விவரங்களுக்கு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலக தொலைபேசி எண் 04562 - 252 607ல் அழைக்கலாம், என மாவட்ட நிர்வாகம் தெரி வித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us