/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரி மலையிலிருந்து கீழிறங்கிய 2 பக்தர்கள் விழுந்து கால் முறிவு
/
சதுரகிரி மலையிலிருந்து கீழிறங்கிய 2 பக்தர்கள் விழுந்து கால் முறிவு
சதுரகிரி மலையிலிருந்து கீழிறங்கிய 2 பக்தர்கள் விழுந்து கால் முறிவு
சதுரகிரி மலையிலிருந்து கீழிறங்கிய 2 பக்தர்கள் விழுந்து கால் முறிவு
ADDED : ஏப் 14, 2025 03:43 AM
வத்திராயிருப்பு : விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கும் போது சங்கிலிபாறையில் தடுமாறி விழுந்ததில் ஈரோடு, மதுரையைச் சேர்ந்த 2 பக்தர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டது.
உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவின்படி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தினமும் காலை 6:00 முதல் 10:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். வார விடுமுறை நாளான நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறினர்.
தரிசனம் செய்துவிட்டு அடிவாரம் திரும்பும் போது சங்கிலிபாறை என்ற இடத்தில் தடுமாறி கீழே விழுந்ததில் ஈரோட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பாலாஜி 27, மதுரையைச் சேர்ந்த பெயின்டர் கனிராஜ் 34, ஆகியோருக்கு கால் முறிவு ஏற்பட்டது. பிறகு சுமை தூக்கும் தொழிலாளர்களின் உதவியுடன் இருவரும் அடிவாரம் கொண்டு வரப்பட்டனர். பின் வருவாய்த்துறையினர் உதவியுடன் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.