ADDED : ஆக 31, 2025 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்ட: அருப்புக்கோட்டையில் அதிகாலையில் 2 கடைகள் எரிந்து சேதமடைந்தது.
அருப்புக்கோட்டை பெரிய கடை பஜாரில் நாடார் மகமை கடைக்கு அருகில் அரிசி மற்றும் அலைபேசி சர்வீஸ் கடை, முறுக்கு கடை உள்ளது.நேற்று அதிகாலை 3:00 மணிக்கு அலைபேசி கடையில் தீப்பிடித்து அருகில் உள்ள முறுக்கு கடைக்கு பரவியது.
தீப்பிடித்ததில் 2 கடைகளும் சேதம் அடைந்து அதில் உள்ள பொருட்கள் நாசமாயின. தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.