/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துார் கோவிலில் 2 கொடி மரங்கள் மாயம்
/
ஸ்ரீவில்லிபுத்துார் கோவிலில் 2 கொடி மரங்கள் மாயம்
ADDED : பிப் 04, 2024 02:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள், வடபத்ரசயனர், பெரியாழ்வார் சன்னிதிகளில் இருந்த பழைய கொடி மரங்கள், கும்பாபிஷேகத்தின் போது மாற்றப்பட்டு புதிதாக மூன்று கொடி மரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
அப்போது மாற்றப்பட்ட பழைய கொடி மரங்களில், இரண்டு கொடி மரங்கள் கோவிலில் இருந்து மாயமானது. மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.,யிடம் கோவில் செயல் அலுவலர் முத்துராஜா புகார் அளித்துள்ளார்.