ADDED : நவ 29, 2024 02:39 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் சிவகாசி தட்டாவூரணியைச் சேர்ந்தவர் முருகேசன் 59, கூலித் தொழிலாளி. இவர் 2023 மே மாதம் 6 வயது சிறுமிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
முருகேசனை சிவகாசி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடந்தது. முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார்.
