/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் 21,679 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்
/
மாவட்டத்தில் 21,679 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்
மாவட்டத்தில் 21,679 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்
மாவட்டத்தில் 21,679 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்
ADDED : மார் 01, 2024 12:04 AM
விருதுநகர், - விருதுநகர் மாவட்டத்தில் இன்று முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது.
விருதுநகர் கல்வி மாவட்டத்தில் இருந்து 9651 பேரும், சிவகாசி கல்வி மாவட்டத்தில் இருந்து 12 ஆயிரத்து 28 பேரும் என 21 ஆயிரத்து 679 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில் ஆண்கள் 9935, பெண்கள் 11 ஆயிரத்து 744 பேர். மாவட்டம் முழுவதும் உள்ள 223 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 98 தேர்வு மையங்களில தேர்வு நடக்கிறது.
5 இடங்களில் வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன. முதன்மை கண்காணிப்பாளர்கள் 102 பேர், துறை அலுவலர்கள் 102 பேர், அறை கண்காணிப்பாளர் 1729 பேர், பறக்கும் படைகள் 126, வழித்தட அலுவலர்கள் 21 பேர் என 2080 பேர் தேர்வு நடத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு, மாணவர்களுக்கான அறை, குடிநீர் வசதிகளை உள்ளிட்ட ஏற்பாடுகளை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மும்முரமாக செய்து வருகிறது.