ADDED : பிப் 09, 2026 05:09 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: ''22 மாவட்டங்களில் 25 சதவீதத்திற்கும் மேல் ஓட்டுகள் உள்ள எங்கள் மக்களை அரசியல் கட்சிகள் மதிக்கவில்லை ,''என ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கிளை செயலாளர்கள், ஓட்டு சாவடி முகவர்கள் கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேசினார்.
அவர் மேலும் பேசியதாவது; நமது மக்களின் பல ஆண்டு பிரச்னை தீர்க்க வேண்டும் நோக்கத்தில் தான் நாம் கூட்டணி குறித்து முடிவு எடுக்க முடியும். பல்வேறு தொகுதிகளில் நமது ஓட்டுகளை பெற்று விட்டு நம்மை வெற்றி பெற வைப்பது கூட்டணி வைப்பவர்களுக்கு கசக்கிறது. பிறரை போல நாமும் இருக்க வேண்டும் என்பதற்காக தான் அதிகாரத்தில் பங்கு கேட்கிறோம்.
தனித் தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் கூட நமது சமுதாய மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில்லை. ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதியில் புதிய தமிழகம் கண்டிப்பாக போட்டியிடும்.
எந்த கூட்டணியில் சேர்ந்தால் நம்மை பிரித்துப் பார்க்காமல், சதி செய்யாமல், துரோகம் செய்யாமல் ஓட்டளிப்பார்களோ அவர்களோடு சேர்வது தான் உண்மையான கூட்டணி. ஆனால், இதுவரையில் வஞ்சகம் தான் நடந் திருக்கிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் நாம் கூட்டணி சேர்ந்தவர்கள் உண்மையாக பணியாற்ற வில்லை. எல்லோரும் நடித்தார்கள். யார் போட்டியிட்டாலும் புதிய தமிழகம் வெற்றி பெற வேண்டும் சட்டசபையில் குரல் ஒலிக்க வேண்டும்., என பேசினார்.
