ADDED : ஏப் 11, 2026 08:42 PM
அ நிறம் | அளவு
வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு அருகே புதுப்பட்டி உடையார் பட்டியில் வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் தி.மு.க. செயலாளர் சாந்தாராம், அனுமதியின்றி கூட்டம் நடத்துவதாக ஸ்ரீவில்லிபுத்துார் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை புகார் வந்துள்ளது.
தேர்தல் பறக்கும் படை அலுவலர் விஜயராணி தலைமையிலான குழுவினர், நேற்று காலை 11:00 மணிக்கு அங்கு சோதனை செய்தனர்.
அப்போது கூட்டத்தில் விநியோகம் செய்ய வைத்திருந்த 260 சிக்கன் பிரியாணி பார்சல்களை பறிமுதல் செய்து, வத்திராயிருப்பு போலீசில் ஒப்படைத்து, வழக்கு பதிவு செய்ய புகார் அளித்தனர். வத்திராயிருப்பு போலீசார் நீதிமன்ற அனுமதி பெற்று பறிமுதல் செய்யப்பட்ட பிரியாணி பார்சல்களை மண்ணில் குழி தோண்டி புதைத்து அழித்தனர்.
