தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது

 தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது

 தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது


ADDED : ஏப் 09, 2026 11:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 11:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சுழி:திருச்சுழி அருகே சவ்வாஸ்புரம் கிராமத்தில் வாலிபரை வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

சவ்வாஸ்புரத்தில் உள்ள காளியம்மன், மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் மாங்குளத்தைச் சேர்ந்த மாரிக்கண்ணன், 20, கருப்பசாமி, 21, மற்றும் சில இளைஞர்கள் கஞ்சா போதையில் கையில் வாளுடன் சுற்றி திரிந்தனர். இதை அதே ஊரைச் சேர்ந்த மில் தொழிலாளி வேல்முருகன், 33, சத்தம் போட்டு உள்ளார்.

இதனால் கோபமடைந்த அவர்கள் அன்று அதிகாலை 3:00 திருவிழா முடிந்த பின் வேல்முருகனை , மறைந்திருந்து கருப்பசாமி, மாரிக்கண்ணன் மற்றும் இளைஞர்கள் வாளால் வெட்டி கொன்றனர். இது தொடர்பாக சவ்வாஸ் புரத்தைச் சேர்ந்த நாகராஜன் 20, இந்திரஜித், 20, மாரிக்கண்ணன், 20 ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்து ஜெயிலில் அடைத்தனர்.

___

படம் உள்ளது

___

படம் உள்ளது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us