/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
3 கி.மீ., அலைந்தும் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் தவிப்பு
/
3 கி.மீ., அலைந்தும் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் தவிப்பு
3 கி.மீ., அலைந்தும் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் தவிப்பு
3 கி.மீ., அலைந்தும் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் தவிப்பு
ADDED : பிப் 19, 2024 05:38 AM
திருச்சுழி : திருச்சுழி அருகே 3 கி.மீ., நடந்து சென்றாலும் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஆலடிபட்டி ஊராட்சியில் மீனாட்சிபுரம், ராமசாமிபட்டி, மேலகுருணைகுளம், கீழ குருணைகுளம் கிராமங்கள் அடங்கியுள்ளது.
இதில் 3 கி.மீ., தூரத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் ராமசாமிபட்டி, மேலகுருணை குளம், கீழகுருணைகுளம் மக்கள் ரேஷன் பொருட்களை வாங்குகின்றனர்.
அதுவும், மாதத்தில் ஒரு நாளில் மட்டும் இந்த 3 ஊர் மக்கள் வந்து வாங்க வேண்டியுள்ளது. கடை மதியம் 2:00 மணி வரை தான் செயல்படுகிறது.
3 கிராமங்களிலும் மக்கள் விவசாயம் செய்து வருவதால், ரேஷன் பொருட்களை வாங்க முடிவதில்லை.
வேறு நாட்களில் சென்றால் கடைகாரர் பொருட்களை வழங்குவதில்லை.
பொது விநியோகத்துறை அதிகாரிகள் 3 கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்தப் பகுதிகளில் கூடுதல் ரேஷன் கடையை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் நடமாடும் ரேஷன் கடை வாகனத்தை இந்த பகுதிக்கு கொண்டு சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும்.
இந்த பகுதியை மக்களின் பல ஆண்டு கோரிக்கையாக இது உள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

