/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெவ்வேறு விபத்துகளில் ஒரே நாளில் 3 பேர் பலி
/
வெவ்வேறு விபத்துகளில் ஒரே நாளில் 3 பேர் பலி
ADDED : நவ 20, 2025 04:00 AM
ராஜபாளையம், நவ. 20--
ராஜபாளையம் அருகே ஒரே நாளில் வெவ்வேறு சாலை விபத்தில் மூன்று பேர் பலியாகினர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி சேர்ந்தவர் சுந்தர்ராஜ் 45, சங்கரன்கோவில் ரோட்டில் தனியார் மில்லில் பணி முடிந்து சாலையை கடந்த போது டூவீலர் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். டூவீலரில் வந்த காளிராஜ், ராமர், வேல்முருகன் மூவர் மீது தளவாய்புரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
* அயன் கொல்லங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் 45, தென்காசி ரோட்டில் டூவீலரில் வந்த போது மதுரையை சேர்ந்த பிரகாஷின் டூ வீலர் எதிரெதிரே மோதியதில் பலத்த காயமடைந்து மகேஷ் உயிரிழந்தார். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
* சேத்துார் சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் 48, தென்காசி ரோட்டில் டூவீலரில் வந்தபோது நிலை தடுமாறி விழுந்ததில் சம்பவ இடத்தில் பலியானார். (ஹெல்மெட் அணியவில்லை). சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

