தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/3 பேரின் கண்கள் தானம்

3 பேரின் கண்கள் தானம்

3 பேரின் கண்கள் தானம்


UPDATED : அக் 13, 2026 06:49 PM

ADDED : அக் 13, 2026 05:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 06:49 PM ADDED : அக் 13, 2026 05:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: இறந்த பொன்செல்வி 50, ராஜேந்திரன் 76, குருநாதன் 54, ஆகியோரின் கண்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

விருதுநகர் சுத்தமடம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பொன்செல்வி 50, அக்.8ல் இறந்தார். மீசலுார் அழகாபுரியை சேர்ந்தவர் ராஜேந்திரன் 76, அக்.8ல் இறந்தார். ஆர்.ரெட்டியபட்டியை சேர்ந்தவர் குருநாதன் 54, நேற்று இறந்தார்.

இவர்களின் உடல் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டது. இறந்த 6 மணி நேரத்திற்குள் கண்தானம் செய்ய முடியும் என்பதால் உறவினர்கள் சம்மதத்துடன் 3 பேரின் கண்களும் தானமாக பெறப்பட்டது.

இக்கண்கள் தற்போது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை கண்தானம் வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவைப்படும் போது பயன்படுத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us