/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருவேறு விபத்துக்களில் சிறுவன் உட்பட 3 பேர் பலி 4 பேர் காயம்
/
இருவேறு விபத்துக்களில் சிறுவன் உட்பட 3 பேர் பலி 4 பேர் காயம்
இருவேறு விபத்துக்களில் சிறுவன் உட்பட 3 பேர் பலி 4 பேர் காயம்
இருவேறு விபத்துக்களில் சிறுவன் உட்பட 3 பேர் பலி 4 பேர் காயம்
ADDED : செப் 29, 2025 02:12 AM

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் அருகே சேத்துாரில் ரோட்டோர இறைச்சி கடைக்குள் லாரி புகுந்ததில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். அருப்புக்கோட்டையில் நடந்த மற்றுமொரு விபத்தில் புறவழிச் சாலை ரவுண்டானாவில் கார் மோதி கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். மூவர் காயமடைந்தனர்.
ராஜபாளையம் அடுத்த சேத்துார் காமராஜர் நகரை சேர்ந்தவர் பொன்னையா 75. இவர் முன்னாள் எம்.பி., லிங்கத்தின் சகோதரர். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு இவரது சாலையோர இறைச்சி கடைக்குள் ராஜபாளையத்தில் இருந்து சொக்கநாதன்புத்துார் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து புகுந்தது.
இதில் பொன்னையா, இறைச்சி வாங்க நின்றிருந்த சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த ஆகாஷ் 16, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடை அருகே கட்டப்பட்டிருந்த பசுமாடும் உயிரிழந்தது.
காயமடைந்த சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த மணிமாறன் 26, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். லாரி டிரைவர் தலைமலை 38,ஐ கைது செய்து தளவாய்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
* விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த யோகராஜ் 36, அதே ஊரைச் சேர்ந்த தமிழரசன் 18, சுந்தர் 22, சதாம் உசேன் 23, ஆகியோருடன் ஒரு காரில் அருப்புக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அதிகாலை 1:00 மணிக்கு மேற்கு புறவழிச் சாலை ரவுண்டானா அருகில் உள்ள சென்டர் மீடியனில் கார் கவிழ்ந்தது. இதில் யோகராஜ் பலியானார். காயமடைந்த மூவரையும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.