/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தர்ணாவில் ஈடுபட்ட ஓய்வூதியர் சங்க தலைவர் உட்பட 3 பேர் மயக்கம்
/
தர்ணாவில் ஈடுபட்ட ஓய்வூதியர் சங்க தலைவர் உட்பட 3 பேர் மயக்கம்
தர்ணாவில் ஈடுபட்ட ஓய்வூதியர் சங்க தலைவர் உட்பட 3 பேர் மயக்கம்
தர்ணாவில் ஈடுபட்ட ஓய்வூதியர் சங்க தலைவர் உட்பட 3 பேர் மயக்கம்
ADDED : டிச 18, 2024 02:34 AM
விருதுநகர்:விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்டத்தலைவர் முருகாயி உட்பட 3 பேர் மயங்கி விழுந்தனர்.
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல ஓய்வூதியம் ரூ.6750 வழங்க வேண்டும்.
ஈமச்சடங்கு நிதி ரூ. 25 ஆயிரம், மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைவர் முருகாயி தலைமையில் தர்ணா நடந்தது.
பல்வேறு அரசு அலுவலர்கள் தங்கள் சார்ந்த சங்கங்கள் சார்பில் பங்கேற்றனர்.
மாவட்டத்தலைவர் முருகாயி, துணைத்தலைவர் வெள்ளைத்தாய், இணைச் செயலாளர் பாத்திமேரி ஆகியோர் மயங்கி விழுந்தனர்.
அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.