/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,யில் ரோடு விபத்துகளில் 5 மாதங்களில் 32 பேர் பலி
/
ஸ்ரீவி.,யில் ரோடு விபத்துகளில் 5 மாதங்களில் 32 பேர் பலி
ஸ்ரீவி.,யில் ரோடு விபத்துகளில் 5 மாதங்களில் 32 பேர் பலி
ஸ்ரீவி.,யில் ரோடு விபத்துகளில் 5 மாதங்களில் 32 பேர் பலி
ADDED : ஜூன் 11, 2025 07:12 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் கடந்த 5 மாதங்களில் நடந்த 31 ரோடு விபத்துகளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து சிவகாசி, மதுரை, வத்திராயிருப்பு செல்லும் ரோடுகளில் அதிகளவு வாகன போக்குவரத்து உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு டூவீலர்கள் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதனால் தினசரி டூவீலர்கள் விபத்துக்கள் பல்வேறு வழித்தடங்களில் நடப்பது வாடிக்கையானது.
அதிலும் குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு நேரங்களில் மது போதையில் விபத்துக்கள் ஏற்படுகிறது.
இந்நிலையில் கடந்த 5 மாதங்களில் நடந்த 31 ரோடு விபத்துகளில் 32 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இதில் ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து சிவகாசி செல்லும் ரோட்டிலும், கிருஷ்ணன்கோவிலில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் ரோட்டிலும், ஸ்ரீவில்லிபுத்துார் அழகாபுரி ரோட்டிலும் அதிகளவில் டூவீலர் விபத்து சம்பவங்கள் நடந்துள்ளது.
எனவே இந்த வழித்தடத்தில் ரோடு விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போக்குவரத்து துறையும், டிராபிக் போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.