/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தனியார் பஸ் - லாரி மோதல் மாணவிகள் உட்பட 4 பேர் காயம்
/
தனியார் பஸ் - லாரி மோதல் மாணவிகள் உட்பட 4 பேர் காயம்
தனியார் பஸ் - லாரி மோதல் மாணவிகள் உட்பட 4 பேர் காயம்
தனியார் பஸ் - லாரி மோதல் மாணவிகள் உட்பட 4 பேர் காயம்
ADDED : டிச 24, 2024 04:13 AM

திருச்சுழி: திருச்சுழி அருகே தனியார் பஸ்சும், லாரியும் மோதி கொண்டதில் மாணவிகள் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.
திருச்சுழியில் குவாரி லாரிகள் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்படுகிறது. நேற்று அருப்புக்கோட்டையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் திருச்சுழி வழியாக நரிக்குடி சென்று கொண்டிருந்தது. மயிலி விலக்கு பகுதியில், மதியம் 2:30 மணிக்கு, வேகமாக வந்த கல்குவாரி லாரி, பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பஸ் டிரைவர் அருப்புக்கோட்டை பாலையம்பட்டி பூமிநாதன் 49, பஸ்சில் பயணம் செய்த மாணவிகள் குருந்தங்குளம் சந்தியா 17, களத்திகுளம் விஜயதர்ஷினி 16, மானுார் மாணவர் சக்தி 18, ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்கள் திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
லாரியை விட்டுவிட்டு தப்பி ஓடிய டிரைவரை திருச்சுழி போலீசார் விரட்டி பிடித்து விசாரித்ததில், அவர் சிவகங்கையை சேர்ந்த சின்னத்துரை என்பது தெரிந்தது.