/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அழிவின் அச்சுறுத்தலில் 41 சதவீத தவளைகள்
/
அழிவின் அச்சுறுத்தலில் 41 சதவீத தவளைகள்
ADDED : செப் 12, 2025 04:11 AM

ஸ்ரீவில்லிபுத்துார்:வாழ்விட இழப்பு, காலநிலை மாற்றம், பூஞ்சை நோய்கள் காரணமாக 41 சதவீத தவளைகள் அழிவின் அச்சுறுத்தலில் உள்ளதாக வனத்துறை கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வனத்துறை சார்பில் ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப் பகத்தில் தவளைகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு ஸ்ரீவில்லிபுத்துார் வன விரிவாக்க மையத்தில் நடந்தது.
புலிகள் காப்பக திட்ட இயக்குனர் ஆனந்த் தலைமை வகித்தார். துணை இயக்குனர் முருகன் வரவேற்றார். வன உயிரின பாதுகாப்பிற்கான மேம்பாட்டு நிறுவன துணை இயக்குனர் செண்பக பிரியா, தலைமை விஞ்ஞானி கார்த்திகேய வாசுதேவன், ஆராய்ச்சி யாளர்கள் சுசிந்தனா குப்தா, சந்திப் தாஸ் பேசினர்.
இயக்குனர் ஆனந்த் பேசுகையில், உலகில் பல இடங்களில் காணப்பட்ட தவளைகள் கடந்த 50 கோடி ஆண்டுகளாக இந்தியாவில் காணப் படுகிறது. இவை தரைக்கு அடியிலும் வாழ்கிறது. புலிகள், யானைகள் குறித்து பல்வேறு திட் டங்கள் உள்ளது போல் தவளைகளுக்கும் ஆராய்ச்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும், என்றார்.
ஆராய்ச்சியாளர் சுசீந்தனா குப்தா பேசுகையில், உலகில் பல உயிரினங்கள் வாழ்ந்தாலும் தவளைகள் சுற்றுச்சூழல் மாசுபடாத சூழல்களில் மட்டுமே வாழ்கின்றன. வாழ்விட இழப்பு, காலநிலை மாற்றம், உயிரிழப்பு போன்றவற்றின் காரணமாக 41 சதவீத தவளைகள் அழிவின் அச்சுறுத்தலில் உள்ளது.
2003ல் கேரளாவில் புதிய வகை தவளை கண்டு பிடிக்கப்பட்டது. இது டைனோசர் காலத்தில் இருந்து வாழ்ந்து வருவதாக அறியப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பக தோப்பு பகுதியில் முற்றிலும் அழிந்து விட்ட தாக கருதப்பட்ட பூபதி ஊதா வகை தவளைகள் தற்போது செண்பகத் தோப்பு மலைப்பகுதியில் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
கருத்தரங்கில் ஆராய்ச்சி யாளர்கள், உயிரிய லாளர்கள், வனத்துறை யினர் பங்கேற்றனர்.