தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/46,812 வழக்குகள்

46,812 வழக்குகள்

46,812 வழக்குகள்


UPDATED : நவ 29, 2026 12:00 AM

ADDED : நவ 28, 2026 11:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 12:00 AM ADDED : நவ 28, 2026 11:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

l விருதுநகர் மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில்

l போலீஸ், நீதித்துறையில் காலிப்பணியிடங்களால்

ஸ்ரீவில்லிபுத்துார்: தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பின் கணக்கின்படி, விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் முதல் மாவட்ட அளவிலான நீதிமன்றங்கள் வரை, கூலித் தொழிலாளர்கள் முதல் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் உட்பட 46,812 வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீஸ், நீதித்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, சாத்துார், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய 7 சப் டிவிஷன்களின் கீழ் 48 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இது தவிர போக்குவரத்து, மகளிர், லஞ்ச ஒழிப்புத்துறை, மாவட்ட குற்றப்பிரிவு, உணவு பொருள் கடத்தல் தடுப்பு போன்ற சிறப்பு பிரிவு போலீஸ் ஸ்டேஷன்களும் உள்ளது.

இதில் சட்டம் ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்களில் ஆண்டுதோறும் குறைந்தது 200 முதல் 700 க்கும் மேற்பட்ட வழக்குகள், சிறப்பு பிரிவு போலீஸ் ஸ்டேஷன்களில் ஆண்டுதோறும் 200 வழக்குகளும், லஞ்ச ஒழிப்புத் துறையில் குறைந்தது 7 முதல் அதிகபட்சம் 14 வழக்குகள் வரை பதிவு செய்யப்படுகிறது.

இதில் சாதாரண குற்ற வழக்குகள் அந்தெந்த தாலுகாவில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களிலும், கொலை போன்ற குற்றங்களுக்கான வழக்குகள் ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர், அருப்புக்கோட்டை கூடுதல் மாவட்ட நீதிமன்றங்களிலும், முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் மீதான வழக்கு கள் ஸ்ரீவில்லிபுத்துார் சிறப்பு நீதிமன்றத்திலும், லஞ்ச வழக்குகள் ஊழல் தடுப்பு நீதிமன்றங்களில் நடந்து வருகிறது.

இதில் வனத்துறை வழக்குகள், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள் 10 ஆண்டுகளை கடந்தும் நடந்து வருகிறது. 2012ல் முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்குகள், 14 ஆண்டுகள் கடந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.

இதில் தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பு கணக்கின்படி விருதுநகர் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 16,882 சிவில், 29, 930 கிரிமினல் வழக்குகள் உட்பட மொத்தம் 46812 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது.

இதில் ஓராண்டுக்கு கீழான வழக்குகள் 58 சதவீதம், 3 ஆண்டுக்குட்பட்ட வழக்குகள் 22 சதவீதம், 5 ஆண்டுகளுக்கு கீழ் 11 சதவீதம், 10 ஆண்டுகளுக்கு கீழ் 7 சதவீதம், 10 ஆண்டுகளுக்கும் மேலாக 2 சதவீத வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள், கிரிமினல் வழக்குகளை விட அதிகளவில் சிவில் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.

இதனால் போலீஸ் மற்றும் நீதித்துறையில் பணிச்சுமை அதிகரித்து வருகிறது. பணி நேரம் முடிந்தும், இரவு 7:00 மணியை கடந்தும், விடுமுறை நாட்களில் கூட நீதிமன்ற ஊழியர்கள் பணி செய்வதை காண முடிகிறது. இதேபோல் தண்டனை பெற்றவர்களை சிறையில் அடைத்து விட்டு திரும்புவதற்கு போலீசாரும் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.

தற்போது தகவல் தொடர்பு தொழில் நுட்ப வசதிகள் அதிகரித்தாலும் போதிய அளவிற்கு காவல் துறையில் போலீசார்களும், நீதித்துறையில் நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் போதிய அளவிற்கு நியமிக்கப்படவில்லை.

ஒரு நீதிபதியே இரண்டு நீதிமன்றங்களிலும், லஞ்ச ஒழிப்பு துறை வழக்குகளில் ஒரு அரசு வழக்கறிஞரே இரு மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றி வருகின்றனர். நீண்ட காலமாக நடக்கும் வழக்கு விசாரணைகளால் குற்றம் சாட்டப்பட்டவர்களும், அவர்களது குடும்பத்தினரும் போக்குவரத்து, பொருளாதாரம் ரீதியாக பாதிக்கப்பட்டு வரு கின்றனர். எனவே, போலீஸ், நீதித்துறையில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி வழக்குகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us