UPDATED : மே 16, 2026 07:05 PM
ADDED : மே 16, 2026 06:13 PM
நரிக்குடி:நரிக்குடி பனைக்குடியை சேர்ந்தவர் விவசாயி ராமசாமி 45. 15 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். மேய்ச்சலுக்காக ஆடுகளை பனைக்குடி சாலை மறைக்குளம் இடையே உள்ள வயல்வெளியில் வலை அமைத்து ஆட்டுக்கிடையில் கட்டிப்போட்டு பாதுகாத்து வந்தார்.
(மே 15)அதிகாலையில் ஆட்டுக்கிடையில் பாதுகாப்புக்கு இருந்த ராமசாமி ஊருக்குள் சென்றார். அப்போது ஆட்டுக்கிடைக்குள் புகுந்த 8 க்கும் மேற்பட்ட வெறிநாய்கள், செம்மறி ஆடுகளை கடித்து குதறியது. ஆடுகளின் கதறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து, நாய்களை விரட்டினர். கழுத்து, வயிற்றில் கடித்ததில் 5 ஆடுகள் குடல் தள்ளி சம்பவ இடத்திலே உயிரிழந்தது. படுகாயம் அடைந்த மேலும் 5 க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
