/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மினி பஸ்களை இயக்க 56 வழித்தடங்கள் விண்ணப்பிக்க அழைப்பு
/
மினி பஸ்களை இயக்க 56 வழித்தடங்கள் விண்ணப்பிக்க அழைப்பு
மினி பஸ்களை இயக்க 56 வழித்தடங்கள் விண்ணப்பிக்க அழைப்பு
மினி பஸ்களை இயக்க 56 வழித்தடங்கள் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : பிப் 14, 2025 06:20 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 56 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துஉள்ளது.
கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது:
மாவட்டத்தில் 56 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி விருதுநகர் வட்டாரப்போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட சண்முக சுந்தரபுரம் விலக்கு முதல் கோட்டூர் வரை, ஆத்துப்பாலம் முதல் மங்களம் பிரிவு வரை, ஆயுதப்படை மைதானம் முதல் மத்தியசேனை விலக்கு வரை, வெற்றிலை முருகன்பட்டி முதல் காரியாபட்டி முக்கு ரோடு வரை, துலுக்கப்பட்டி ராம்கோ சிமென்ட் ஆலை முதல் மேட்டமலை வரை, ஸ்ரீராம்பூர் முதல் அழகாபுரி வரை, காரியாபட்டி முதல் வெற்றிலைமுருகன்பட்டி வரை, காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் முதல் என்.நெடுங்குளம், குறிஞ்சான்குளம் வரை, அருப்புக்கோட்டை அலுவலக எல்லைக்குட்பட்ட அருப்புக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் புலி குறிச்சி, புலியூரான் வரை.
சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட தேவர் சிலை முதல் சாமிநத்தம் வரை, வெற்றிலையூரணி முதல் கூத்தனாட்சியாபுரம்வரை, அய்ய நாடார் கல்லுாரி முதல் இடையன்குளம் வரை சிவகாசி அரசு மருத்துவமனை முதல் வடமலாபுரம் காலனி பிரிவு வரை, வெற்றிலையூரணி முதல் சேதுராமலிங்கபுரம் வரை.
ஸ்ரீவில்லிபுத்துார் எல்லைக்குட்பட்ட லட்சுமி நாராயண மஹால் முதல் பொட்டல்பட்டி வரை, மல்லி முதல் இனாம் கரிசல்குளம் வரை, கிருஷ்ணன்கோவில் முதல் பண்டிதன்பட்டி, அழகாபுரி வரை, ஸ்ரீவில்லிபுத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் பி.மீனாட்சிபுரம், மல்லி வரை, மல்லி முதல் அன்னை சத்யா நகர் வரை, அழகாபுரி முதல் சுந்தரபாண்டியம் வரை.
ராஜபாளையம் அலுவலக எல்லைக்குட்பட்ட காட்டன் மார்க்கெட் முதல் நரிமேடு வரை, ஆர்.டி.ஓ., ஆபீஸ் முதல் தொட்டியபட்டி வரை, சத்திரப்பட்டி முதல் கோபாலபுரம் வரை, காந்தி சிலை முதல் அன்னத்தலை விநாயகர் கோவில் வரை, சாராபட்டி முதல் குறுக்கம்பட்டி வரை, தளவாய்புரம் பஸ் ஸ்டாண்ட் முதல் முறம்பு வரை, சம்சிகாபுரம் முதல் தும்பகுளம் வரை, ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் முதல் சமத்துவபுரம் வரை, ரெட்டியாபட்டி முதல் அப்பநாயக்கன்பட்டி வரை, புது பஸ் ஸ்டாண்ட் முதல் நத்தம்பட்டி வரை உள்ளிட்ட 56 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க அனுமதி பெற விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நேரில் விண்ணப்பிக்கலாம், என்றார்.

