/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் 67 மி.மீ., மழை; பேயனாற்றில் நீர்வரத்து ஸ்ரீவில்லிபுத்துாரில் 67 மி.மீ., மழை

ADDED : அக் 16, 2024 05:07 AM

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி 67 மி.மீ., மழை பெய்ததால் செண்பகத் தோப்பு பேயனாற்றில் நீர் வரத்து ஏற்பட்டது.
நேற்று முன்தினம் மதியம் 2:40 மணிக்கு துவங்கி இரவு 9:00 மணி வரை நகர் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் பஸ் ஸ்டாண்ட், தேரடி, பெரிய மாரியம்மன் கோயில், ஆத்து கடை உட்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக செண்பகத் தோப்பு பேயனாற்றில் நீர்வரத்து ஏற்பட்டது.
இதனால் மம்சாபுரம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்ததால் வத்திராயிருப்பு தாலுகா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராஜபாளையம்: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் நடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு தொடர்மழை பெய்து வரும் நிலையில் மலைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து வழியும் ஓடைகளில் நீர் ஆற்றில் பெருகி அதிகரித்துள்ளது.
மாவரசி அம்மன், முள்ளிக்கடவு பகுதிகளில் பெய்யும் நீர் நகராட்சி நிர்வாகத்தால் குடியிருப்பு வாசிகளின் குடிநீர் தேவைக்காக ஆற்றின் முகப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு தடுப்பணைகள் மூலம் ஆறாவது மைல் நீர் தேக்கத்திற்கு திருப்பி விடப்பட்டு உள்ளது.
இதன் மூலம் கோடையில் வற்றி 5 அடி உள்ள நீர் தேக்கம் சமீபத்திய மழையினால் ஒரே நாளில் ஒரு அடி உயரம் அதிகரித்துள்ளது.
இதனால் வாரம் ஒரு முறை குடிநீர் சப்ளை பெறும் குடியிருப்பு வாசிகள் பிரச்சனையை சமாளிக்கலாம் என நகராட்சி அதிகாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.