/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
97 மாணவர்களுக்கு ரூ.6.75 கோடிக்கு கடன்
/
97 மாணவர்களுக்கு ரூ.6.75 கோடிக்கு கடன்
ADDED : செப் 23, 2024 05:26 AM
விருதுநகர், : விருதுநகரில் மாவட்ட முன்னோடி வங்கி, அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாமில் 97 மாணவர்களுக்கு ரூ.6.75 கோடிக்கு கல்வி கடன் பெறுவதற்கான ஆணையை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.
இம்முகாமில் மாவட்டத்திலுள்ள 200 தேசியமயமாக்கப்பட்ட, தனியார் வங்கி கிளைகளின் மாவட்ட அளவிலான பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அனைத்து வங்கிகள் சார்பாகவும் அரங்குகள் அமைக்கப்பட்டு மாணவர்கள், பெற்றோர்களுக்கு கல்விக்கடன் தொடர்பான சந்தேகங்கள், கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
பெறப்பட்ட விண்ணப்பங்கள் வங்கிக்கிளைகளில் பரிசீலனை செய்யப்பட்டு 20 நாட்களுக்குள் தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.