தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ 73.5 பவுன் கொள்ளை: இருவர் கைது

 73.5 பவுன் கொள்ளை: இருவர் கைது

 73.5 பவுன் கொள்ளை: இருவர் கைது


ADDED : ஜூலை 14, 2026 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 04:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தளவாய்புரம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் 73.5 பவுன் தங்க நகைகளை திருடிய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தளவாய்புரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் 41, ஸ்டிக்கர் கடை வைத்துள்ளார். இவரது மனைவி திருமங்கலம் எல்.ஐ.சி., அலுவலகத்தில் பணிபுரிகிறார்.

இவர் நேற்று முன்தினம் காலை குடும்பத்தினருடன் குற்றாலம் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 73.5 பவுன், 250 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.30,000 ரொக்கம் கொள்ளை போனது தெரிந்தது. தளவாய்புரம் போலீசார் சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். விருதுநகரில் இருந்து தடய அறிவியல் நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. சம்பவத்தில் ஈடுபட்ட ராஜபாளையம் சமந்தாபுரத்தைச் சேர்ந்த சிவா 19, வீரமணி 21, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us