/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு கடை நடத்திய8 போலீசார் இடமாற்றம்
/
பட்டாசு கடை நடத்திய8 போலீசார் இடமாற்றம்
ADDED : அக் 19, 2025 03:28 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக அனைத்து பகுதிகளிலும் தற்காலிக பட்டாசு கடைகள் அனுமதி பெறப்பட்டு இறுதி கட்ட விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. இவற்றிற்கு வெளி மாவட்டங்களில் இருந்து மக்கள் பலர் நேரடியாகவும், ஆன்லைனிலும் பட்டாசுகளை வாங்குகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட போலீஸ் துறையில் பணியில் இருந்து கொண்டு வெளிப்பணியில் உள்ள 8 போலீசார், பட்டாசு கடைகளை அமைத்து மும்மரமாக விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இவர்களை கண்காணித்த மாவட்ட போலீஸ் நிர்வாகம், அவர்களின் பெயர் பட்டியல், நடவடிக்கை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியது. இதையடுத்து மாவட்ட ஆயுதப்படை, கட்டனுார், ஸ்ரீவில்லிபுத்துார் டவுன், சிவகாசி கிழக்கு, சாத்துார் டவுன், விருதுநகர் ஊரகம் ஆகியவற்றில் பணிபுரிந்த 8 போலீசாரை திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்து தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டார்.