/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வீட்டுவாசலில் நின்ற பைக்கில் ரூ. 7.5 லட்சம் திருட்டு
/
வீட்டுவாசலில் நின்ற பைக்கில் ரூ. 7.5 லட்சம் திருட்டு
வீட்டுவாசலில் நின்ற பைக்கில் ரூ. 7.5 லட்சம் திருட்டு
வீட்டுவாசலில் நின்ற பைக்கில் ரூ. 7.5 லட்சம் திருட்டு
ADDED : நவ 07, 2024 02:09 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தைலாகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி 48, பில்டிங் கான்ட்ராக்டர். நேற்று மதியம் 1:00 மணிக்கு ராமகிருஷ்ணபுரம் ரோட்டில் உள்ள வங்கியில் இருந்து ரூ 7.5 லட்சம் பணம் எடுத்துள்ளார். அதனை தனது டூவீலர் பெட்டியில் வைத்து கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டின் முன்பு டூவீலரை நிறுத்திவிட்டு சில நிமிடங்களில் திரும்பி வந்து பார்க்கும்போது டூவீலரில் இருந்த பணம் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அத்தெருவில் உள்ளவர்களிடம் உடனடியாக விசாரித்த போது 2 டூவீலரில் 4 பேர் அவ்வழியாக சென்றது தெரிய வந்தது. சம்பவ இடத்தை டி.எஸ்.பி. ராஜா பார்வையிட்டார்.
நகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது 2 டூவீலர்களில் 4 பேர் தைலாகுளத்தில் இருந்து சர்ச் ரோடு, ராமகிருஷ்ணாபுரம் வழியாக மதுரை ரோட்டில் செல்வது தெரியவந்தது. தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.