தாமிரபரணி குழாய் உடைந்து ரோட்டில் வீணாக ஓடும் குடிநீர்
தாமிரபரணி குழாய் உடைந்து ரோட்டில் வீணாக ஓடும் குடிநீர்
ADDED : ஜன 24, 2026 06:14 AM

அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: ஜன.24--: அருப்புக்கோட்டை அருகே தாமிரபரணி பகிர்மான குழாய் உடைந்து குடிநீர் ரோட்டில் வீணாக ஓடுகிறது.
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் அருப்புக்கோட்டை நகராட்சி, கிராம பகுதி களுக்கு குடிநீர் விநி யோகம் செய்யப்படுகிறது. அருப்புக்கோட்டை வழியாக பாலவநத்தம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பகிர்மான குழாய் மூலம் கொண்டுவரப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. தனியார் மெட்ரிக் பள்ளி அருகில் ரோடு ஓரத்தில் உள்ள குடிநீர் பகிர்மான குழாய் உடைந்து 20 நாட்களாக லட்சக்கணக்கான லிட்டர் வீணாக ரோட்டில் ஓடுகிறது.
பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு உதாரணமாக குடத்துடன் மக்கள் அலையும் நிலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் பகிர்மான குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.
