ADDED : மே 24, 2026 03:23 AM

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பேட்டை தெருவில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் ஏழு வார்டுகளுக்கு குடிநீர் பற்றாக்குறையாக உள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பழைய வெள்ளையா புரம் ரோடு திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகே நீர் தேக்க தொட்டி உள்ளது. இங்கிருந்து மற்ற பகுதிகளில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு குடி யிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப் படுகிறது.
இங்குள்ள தொட்டியில் இருந்து நாடார் நந்தவன தெரு, பேட்டை தெரு வழியாக குழாய் பதிக்கப் பட்டு பாப்பாங்குளம் குடிநீர் தொட்டிக்கு செல்கிறது. இதிலிருந்து 4, 5, 15, 16 உட்பட ஏழு வார்டு களுக்கு குடிநீர் வினி யோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் பேட்டை தெரு வழியாக செல்லும் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதனால் தொட்டிக்கு குடிநீர் முழுமையாக கொண்டு செல்ல முடியாமல் பற்றாக்குறை ஏற்படுகிறது.
எனவே இங்கு சேதம் அடைந்த குழாயை அகற்றி தரமான புதிய குழாய் பதிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
