/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிராம சபையில் அடிதடி 10 பேர் மீது வழக்கு
/
கிராம சபையில் அடிதடி 10 பேர் மீது வழக்கு
ADDED : அக் 04, 2024 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொப்புசித்தம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் முடிந்த பின் நோட்டில் கையெழுத்து இடுவது தொடர்பாக இரு தரப்பினர் மோதிக்கொண்டனர்.
இதில், கொப்புசித்தம்பட்டியை சேர்ந்த பாலாஜி பந்தல்குடி போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின்படி ஜெய்சங்கர்,52, வழி விட்டான்,45, முத்துப்பாண்டி, 38, மாரியப்பன் ஆகியோர் மீதும், குருவம்மாள் கொடுத்த புகாரின்படி, ராஜா, பாலாஜி, முரளிதரன், ஜெயபால், தர்மர், கோட்டைராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

