/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிடப்பில் வாறுகால் கட்ட தோண்டிய பள்ளம்
/
கிடப்பில் வாறுகால் கட்ட தோண்டிய பள்ளம்
ADDED : அக் 24, 2024 04:41 AM

நரிக்குடி: நரிக்குடி நாலூரில் வாறுகால் கட்ட தோண்டப்பட்ட பள்ளம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள், துணை சுகாதார நிலையத்திற்கு வருபவர்கள் என பலரும் விபத்தில் சிக்குகின்றனர்.
நரிக்குடி நாலூரில் வாறுகால் கட்ட பள்ளம் தோண்டப்பட்டது. பணிகளை முடித்து வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல ஏதுவாக இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 3 மாதங்கள் ஆகியும் பணிகளை முடிக்காமல் கிடப்பில் போட்டனர்.
இந்த வழியில் அரசு உயர்நிலைப்பள்ளி, துணை சுகாதார நிலையம் உள்ளது. மாணவர்கள், சுகாதார நிலையத்திற்கு வருபவர்கள், கர்ப்பிணி கள் என அனைவரும் இதனை கடந்து செல்ல வேண்டும்.
மாணவர்கள், துணை சுகாதார நிலையத்திற்கு வருபவர்கள் என பலரும் விபத்தில் சிக்கினர்.
இதையடுத்து அங்கு முள் போட்டு அடைத்து வைத்தனர். இதனை ஒட்டி ஓரமாக இறங்கிச் செல்ல வேண்டிய அவல நிலையில் பலர் தடுமாறி விழுந்ததில் காயம் அடைந்தனர். அடிக்கடி விபத்து நடப்பதால் கிடப்பில் போடப்பட்ட பணிகளை உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

