/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உயர் அழுத்த மின் கோபுரத்தை மறைத்து வளர்ந்த கொடி: விபத்து ஏற்படும் அபாயம்

ADDED : நவ 08, 2025 01:34 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டி கண்மாய் அருகே உயர் மின் அழுத்த மின்கோபுரத்தை கொடிகள் வளர்ந்து மறைத்து உள்ளதால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது ஆத்திப்பட்டி ஊராட்சி . இங்கு வாகைகுளம் கண்மாய் அருகில், உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக மின்கம்பிகள் செல்கிறது.
கண்மாய் அருகில் அமைந்துள்ள இதில் பராமரிப்பு இல்லாததால் இதை சுற்றி செடிகளும், கொடிகளும் மின்கோபுரத்தின் மேல்வரை சென்று அது தெரியாதவாறு மறைத்து வளர்ந்துள்ளது. மின்கம்பிகள் வரை படர்ந்துள்ளதால் கொடி வழியாக மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது. இதனால், இந்த பகுதியில் கால்நடைகள் மேய்ந்து வருவதால் மின் கோபுரம் அருகில் வரும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மின்வாரியத்தினர் பராமரிப்பு பணிகள் செய்து சுற்றியுள்ள கொடிகளை அப்புறப்படுத்தி பாதுகாப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வாரியம் மாதம் ஒரு முறை, வாரம் ஒரு முறை சிறப்பு மின்தடை என பலவித பராமரிப்பு பணிகள் செய்வதற்கு மின்தடையை ஏற்படுத்துகிறது.
இருப்பினும் இது போன்ற உயர் மின்னழுத்த வரும் டவர்களை கண்டு கொள்ளாமல் விட்டது ஏனோ என தெரியவில்லை.