/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் வெளிநாடு பாதயாத்திரை குழுவினர்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் வெளிநாடு பாதயாத்திரை குழுவினர்
ஸ்ரீவில்லிபுத்துாரில் வெளிநாடு பாதயாத்திரை குழுவினர்
ஸ்ரீவில்லிபுத்துாரில் வெளிநாடு பாதயாத்திரை குழுவினர்
ADDED : பிப் 16, 2025 05:28 AM

ஸ்ரீவில்லிபுத்துார் : காந்திகிராமத்தில் இருந்து பாதயாத்திரையாக சங்கரன் கோவில் வீரிருப்பு புத்தர் கோயில் செல்லும் வெளிநாடுகளை சேர்ந்த புத்தமத பக்தர்கள் நேற்று ஸ்ரீவில்லிபுத்துாருக்கு வந்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு கிராமத்தில் உள்ள புத்தர் கோயிலில் உலக அமைதி கோபுரம் திறப்பு விழா பிப். 21ல் நடக்கிறது. இதில் பங்கேற்க ஜப்பான், இத்தாலி, அமெரிக்கா, போலந்து உட்பட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட புத்தமத பக்தர்கள், உலக அமைதி, அகிம்சை பாதயாத்திரையாக பிப்.12ல் காந்தி கிராமத்தில் இருந்து புறப்பட்டு, மதுரை, திருமங்கலம், கல்லுப்பட்டி, கிருஷ்ணன் கோவில், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், கரிவலம் வந்த நல்லுார் வழியாக நாளை (பிப். 17) புத்தர் கோவில் சென்றடைகின்றனர்.
நேற்று காலை கிருஷ்ணன் கோவிலில் இருந்து புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்துாருக்கு வந்தனர். ஆண்டாள் கோயில் ராஜகோபுரத்திற்கு முன்பு போட்டோ எடுத்துக்கொண்டனர். பின்னர் புத்த மத பாடல்களை பாடிக் கொண்டு ராஜபாளையம் சென்றனர்.

