/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டையில் மக்காச்சோளம் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்
/
அருப்புக்கோட்டையில் மக்காச்சோளம் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்
அருப்புக்கோட்டையில் மக்காச்சோளம் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்
அருப்புக்கோட்டையில் மக்காச்சோளம் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்
ADDED : டிச 18, 2024 06:09 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் மக்காச்சோளம் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுத்தினர்.
அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ., வள்ளிக்கண்ணு தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் :
செல்வம், பரளச்சி: சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையில் பரளச்சி பிர்கா முழுவதும் 2000 ஏக்கரில் பயிர் செய்யப்பட்ட பணப் பயிர்கள் அனைத்தும் வெள்ள மூழ்கி பாழாகி விட்டன.
அரசு அதிகாரிகளை அனுப்பி நேரடியாக கள ஆய்வு செய்து இழப்பீடுகளை அரைகுறையாக தருவீர்கள். ஆனால் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள பருத்தி, மக்காச்சோளம், கம்பு, வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தது, சேதமடைந்தது தான்.
பயிர்களை மீண்டும் விளைவித்தால் தான் கிடைக்கும். ஆகையால் மழை வருவதற்கு முன் நீர்நிலைகளை முறையாக பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள். விவசாயிகளை இந்த அரசு வஞ்சிக்கிறது. விவசாயிகளை வாழ விடுங்கள்.
ராம் பாண்டியன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்: அருப்புக்கோட்டை திருச்சுழி காரியாபட்டி தாலுகாக்களில் காட்டுப் பன்றிகள் விவசாயத்தை நாசப்படுத்தி வருகிறது. விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து உள்ளனர்
பன்றியால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து நஷ்ட ஈடு தர வேண்டும் பன்றிகளை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளை தி.மு.க., அரசு புறந்தள்ளு கிறது. விவசாயிகளுக்கு அறிவிக்கும் திட்டங்கள் எல்லாம் அறிவிப்பாகவே மட்டும் உள்ளது.
ரவிச்சந்திரன், புளியங்குளம்: முஷ்ட குறிச்சி பகுதியில் அறுவடை துவங்கி விட்டது கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
அருண்சிங், பரளச்சி: விவசாயிகளுக்கு நேரடியாக பாலூட்டி கூரை மூலம் காய்கறி பயிரிடும் குடில் அமைத்து தர வேண்டும். இன்சூரன்ஸ் கிடைக்காத விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோபாலகிருஷ்ணன், நரிக்குடி: கல்குவாரிகளை ஒழுங்குபடுத்தி விவசாய பயிர்களுக்கு பாதிப்பு இல்லாமல் செய்து தர வேண்டும். குவாரிகளாலும் விவசாயம் கெட்டுவிட்டது.
சிவசாமி, முடுக்கன்குளம்: மக்காச்சோள பயிருக்கு அருப்புக்கோட்டையில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
ஜனார்த்தனன், மீனாட்சிபுரம்: இன்சூரன்ஸ் செய்த விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் கிடைக்காமல் உள்ளது. எந்தெந்த பயிர்களுக்கு எவ்வளவு இன்சூரன்ஸ் உட்பட பல விபரங்களை இன்சூரன்ஸ் அதிகாரிகள் தருவது இல்லை.
அவர்கள் கூட்டத்திற்கு வருவதும் இல்லை. விவசாயிகள் எப்படி இன்சூரன்ஸ் குறித்து தெரிந்து கொள்வது.
உட்பட விவாதங்கள் நடந்தது.
கூட்டத்தில் அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி தாசில்தார்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.