/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாத சுகாதார வளாகம்; தேங்கி கிடக்கும் கழிவுகள்
/
செயல்படாத சுகாதார வளாகம்; தேங்கி கிடக்கும் கழிவுகள்
செயல்படாத சுகாதார வளாகம்; தேங்கி கிடக்கும் கழிவுகள்
செயல்படாத சுகாதார வளாகம்; தேங்கி கிடக்கும் கழிவுகள்
ADDED : பிப் 28, 2024 06:05 AM
ஸ்ரீவில்லிபுத்தூர், : ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 21 வது வார்டில் செயல்படாத சுகாதார வளாகம், வாறுகால்களில் தேங்கி கிடக்கும் கழிவுகள், கொசுத்தொல்லை, சுகாதாரத் கேடு போன்ற குறைகளால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
நந்தவனப்பட்டி தெரு, சிங்கம்மாள் புறம் தெரு,இடையப் பொட்டல் தெரு, நல்ல குற்றாலபுரம் தெரு, மஜித் நகர் ஆகிய பகுதிகள் கொண்டது இந்த வார்டு. இதில் ஆத்துக்கடை தெருவில் உள்ள சுகாதார வளாகம் செயல்பாடு இன்றி பல மாதங்களாக மூடிக்கிடக்கிறது.
ஆத்துக்கடை சந்திப்பில் இருந்து மம்சாபுரம் செல்லும் ரோட்டின் இருபுறமும் உள்ள வாறுகால்களில் கழிவுகள் தேங்கி சுகாதாரக் கேடு காணப்படுகிறது. தார் ரோடு உயர்ந்தும், மண் ரோடு தாழ்வாகவும் இருப்பதால் எதிரும் புதிருமாக வரும் பஸ்கள் எளிதாக செல்ல முடியவில்லை.
நல்ல குற்றாலபுரம் தெருவில் இருந்து இடையபொட்டல் தெரு வழியாக செல்லும் நீர்வரத்து ஓடையில் கழிவுகள் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. அனைத்து தெருக்களிலும் வாறுகால் சுத்தம் செய்யாததால் சுகாதாரக் கேடு காணப்படுகிறது. இதனால் மாலை நேரங்களில் கொசு, தொல்லை அதிகரித்து மக்கள் நோய்களுக்கு ஆளாகின்றனர்.
இதே போல் பல்வேறு தெருக்களில் பேவர்பிளாக் ரோடுகள் நல்ல முறையில் இருந்தாலும், வாறுகாலை ஒட்டிய தடுப்பு சுவர்கள் சிதைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். வார்டின் அனைத்து தெருக்களிலும் வாறுகால்களில் கழிவுகள் தேங்கி காணப்படுகிறது.

