/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயிலில் செயின் பறிப்பு மதுரையை சேர்ந்தவர் கைது
/
ரயிலில் செயின் பறிப்பு மதுரையை சேர்ந்தவர் கைது
ADDED : மார் 18, 2025 06:39 AM

விருதுநகர்: மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கு நேற்று முன்தினம் மாலையில் சென்ற பயணிகள் ரயிலில் சிவகாசியைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் கிஷோர் 19, அணிந்திருந்த ஒரு பவுன் தங்க செயினை பறித்து ஓடிய மதுரையைச் சேர்ந்த சுருஜித் 32, விருதுநகர் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வநத்தத்தைச் சேர்ந்தவர் கிஷோர் 19. இவர் ஸ்ரீவில்லிப்புத்துார் தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். இவர் மணப்பாறையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை சென்ற பயணிகள் ரயிலில் வீடு திரும்புவதற்காக பயணித்தார்.
அப்போது மதுரை சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்த சுருஜித் 32, என்பவர் கிஷோரிடம் ரயிலில் சகஜமாக பேசியவாறு பயணித்து கொண்டு வந்தார். கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷன் வந்ததும் கிஷோரின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க செயினை சுருஜித் பறித்து ரயிலில் இருந்து இறங்கி தப்பி ஓடினார். விருதுநகர் ரயில்வே போலீசார் சுருஜித்தை கைது செய்தனர்.