/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டூவீலரில் இருந்து விழுந்தவர் மீது லாரி ஏறியதில் பலி
/
டூவீலரில் இருந்து விழுந்தவர் மீது லாரி ஏறியதில் பலி
டூவீலரில் இருந்து விழுந்தவர் மீது லாரி ஏறியதில் பலி
டூவீலரில் இருந்து விழுந்தவர் மீது லாரி ஏறியதில் பலி
ADDED : டிச 18, 2024 06:53 AM
ராஜபாளையம்,: ராஜபாளையம் அடுத்த தளவாய்புரம் விலக்கில் டூவீலரில் சரிந்து விழுந்தவர் மீது குவாரிக்கு கல் ஏற்ற சென்ற லாரி ஏறியதில் தலை சிதைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
சேத்துார் அடுத்த சொக்கநாதன் புத்துாரில் செயல்பட்டு வரும் கல்குவாரிக்கு கற்கள் ஏற்ற லாரி சென்று கொண்டிருந்தது.
சேத்துாரில் இருந்து டூவீலரில் வந்து கொண்டிருந்தவர் முன்னால் நிறுத்தப்பட்ட ஆட்டோ மீது மோதியதில் தடுமாறி விழுந்தார். ஆட்டோவை முந்தி செல்ல முயன்ற லாரி அவரது தலை மீது ஏறி இறங்கியதில் மூளை சிதறி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
முகம் அடையாளம் காண முடியாத நிலையில் இவர் வந்த டூவிலர் கேரள மாநிலத்தில் காணாமல் போனதாக புகார் செய்யப்பட்டிருந்தது என்பது என தெரிந்தது.
இவர் வைத்திருந்த சிம் கார்டு இல்லாத அலைபேசியை வைத்து அடையாளம் கண்டதில் தஞ்சை மாவட்டம் கீழகோவில் பத்து கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் 39, என தெரிந்தது. சேத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.