/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் சூறாவளியால் மின்கம்பம் முறிந்தது
/
சாத்துாரில் சூறாவளியால் மின்கம்பம் முறிந்தது
ADDED : ஏப் 26, 2025 05:51 AM

சாத்துார் : சாத்துாரில் நேற்று மாலையில்இடி மின்னலுடன் சூறாவளி காற்று வீசி மழை பெய்ய துவங்கியது இதில் அண்ணா நகரில் மின்கம்பம் முறிந்ததால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது.
சாத்துார், நென்மேனி, சடையம்பட்டி உள்ளிட்ட சுற்று கிராமங்களில்நேற்று மதியம் 3:30 மணிக்கு திடீரென மேகம் சூழ்ந்து இடி மின்னலுடன் சூறாவளியுடன் மழை பெய்தது.
இதைத்தொடர்ந்து மின்சார வாரியத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரத்தை துண்டித்தனர்.
இந்த நிலையில் அண்ணா நகரில் மெயின் ரோட்டில் இருந்த உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பம் முறிந்து அப்பகுதியில் உள்ள கட்டடத்தின் மீது சாய்ந்தது. இதில் யாரும் காயம் அடையவில்லை.
தகவல் அறிந்து அங்கு சென்ற மின்சார வாரியத் துறையினர் உடனடியாக செயல்பட்டு அப்பகுதியில் முறிந்து கிடந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தை நடுவதற்கான பணியில் ஈடுபட்டனர். இந்தப் பணி இரவு வரை நீடித்ததால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது.