ADDED : மே 04, 2026 11:01 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் (தனி) தொகுதியில் வெற்றி பெற்ற த.வெ.க., வேட்பாளர் கார்த்திக் 37, அச்சக தொழிலாளியாக வேலை பார்த்தார்.
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மானகசேரி இந்திரா நகரில் வசித்து வருகிறார். எம்.ஏ.,எம்.எட்., படித்த இவர் சிவகாசியில் ஒரு அச்சக நிறுவன மேலாளராகவும், பட்டாசு விற்பனையாளராகவும் உள்ளார். இவரது மனைவி வேளாங்கண்ணி 33, சிவகாசி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மகள் ஜீனைதா , மகன் துஸ்வந்த்ராம் உள்ளனர்.
