/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மதிமுக சார்பில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டம்
/
மதிமுக சார்பில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டம்
ADDED : மார் 11, 2024 02:16 PM

விருதுநகர்: மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தை ம.தி.மு.க., முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஏற்பாட்டில் அமைச்சர்கள் சிவகாசியில் துவக்கி வைத்தனர்.
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் பகுதியில் மதிமுக சார்பில் குறுங்காடுகள் அமைக்கும் பணி திட்டமிடப்பட்டது. இந்நிகழ்வை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் துரை வைகோ உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
சீமைக்கருவேல மரங்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தகுந்த ஆதாரங்களுடன் எடுத்து வைத்து தொடர்ந்து போராடியவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. சீமைகருவேலம் மரங்களை அகற்ற நீதிமன்றத்தின் மூலம் உத்தரவைப் பெற்று சீமைகருவேல மரங்களை அகற்றும் பணியினை மேற்கொண்டு வந்தார் வைகோ.
அதே வழியில் மக்களையும் மண்ணையும் நேசிக்கும் துரை வைகோ குறுங்காடு அமைக்கும் திட்டத்திற்கான முன்னேற்பாடுகளைத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் பூமிநாதன், சதன் திருமலைக்குமார், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

