/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு விற்பனை நிலையம் திறப்பு; பிரதமர் மோடி காணொளி மூலம் துவக்கி வைப்பு

ADDED : மார் 12, 2024 11:52 PM
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் 'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' விற்பனை நிலையத்தை பிரதமர் மோடி காணொளி மூலம் திறந்து வைத்தார்.
மத்திய அரசின் உள்ளூர்களுக்கான குரல் ' என்ற உள்ளூர் தயரிப்புகளுக்கான சந்தை வழங்குதல், விளிம்புநிலை மக்களுக்கு கூடுதல் வருமான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றிற்காக ரயில்வே அமைச்சகம் மூலம் நாடு முழுவதும் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு ' திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் இந்த விற்பனை நிலையத்தை பிரதமர் மோடி நேற்று காலை 9:00 மணிக்கு காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விருதுநகர்பா.ஜ., கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன், மாவட்ட தொழில் பிரிவுத் தலைவர் மணிகண்டன் உட்பட நிர்வாகிகள், மக்கள் பலர் பங்கேற்றனர்.
இதன் மூலம் விருதுநகர் மாவட்ட தொழிலாளர்களால் உருவாக்கப்படும் கைவினை, கலை, கைத்தறி, ஜவுளிப் பொருட்கள், பராம்பரிய ஆடைகள், விவசாயிகளால் உருவாக்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய முடியும். இதே போன்று தமிழகம் முழுவதும் 95 ரயில்வே ஸ்டேஷன்களில் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.