sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆக்கிரமிப்பில் நீர்வரத்து ஓடை; தேங்கும் கழிவுகளால் சுகாதார கேடு

/

ஆக்கிரமிப்பில் நீர்வரத்து ஓடை; தேங்கும் கழிவுகளால் சுகாதார கேடு

ஆக்கிரமிப்பில் நீர்வரத்து ஓடை; தேங்கும் கழிவுகளால் சுகாதார கேடு

ஆக்கிரமிப்பில் நீர்வரத்து ஓடை; தேங்கும் கழிவுகளால் சுகாதார கேடு


ADDED : பிப் 07, 2024 12:21 AM

Google News

ADDED : பிப் 07, 2024 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 19-வது வார்டில் தெருக்களில் தேங்கும் கழிவுகளால் சுகாதாரத் கேடு, கொசு தொல்லை, ஆக்கிரமிப்பால் சுருங்கும் நீர்வரத்து ஓடை என பல்வேறு குறைபாடுகளுடன் அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டும் அதனை சுற்றியுள்ள கூனங்குளம் புது தெரு, கன்னிமார் கோவில் தெரு, தேவாங்கர் தெரு, பேட்டை கடை, வாழைக்குளம் ஒத்த தெரு, பள்ளிவாசல் பகுதிகள், பேச்சியம்மன் கோயில், துடியண்டி அம்மன் கோவில் தெரு, நகைக்கடை பஜார், ரைஸ் மில் சந்து ஆகிய பகுதிகளைக் கொண்ட இந்த வார்டில் 500க்கும் மேற்பட்ட வீடுகளும், 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட மக்களும் வசிக்கின்றனர்.

இதில் ஒவ்வொரு தெருவிலும் கழிவுநீர் வாறுகால்கள் தினசரி சுத்தம் செய்யப்படாமல் கழிவுகள் தேங்கியுள்ளது.

ஆத்துக்கடை சந்திப்பில் இருந்து குரங்கு பாலம் வரை உள்ள நீர் வரத்து ஓடை ஆக்கிரமிப்பால் சுருங்கியும், கழிவுகள் கொட்டப்பட்டும், செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டியும் காணப்படுகிறது.

இதில் கடைகள், வீடுகள் போட்டி போட்டு பாதைகளை ஆக்கிரமித்து வருவதாலும், சந்து பகுதியில் இருந்து இருந்து மெயின் ரோட்டுக்கு வரும் பாதையில் உயரமான தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளதாகும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கூனங்குளம் புதுத் தேர்வில் சாக்கடை கழிவுகள் தேங்கி நிற்கிறது. பேட்டைக்கடை தெரு தாழ்வாகவும், மெயின் ரோடு உயரமாகவும் இருப்பதால் அப்பகுதி கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது.

வாழைக்குளம் ஒத்த தெருவில் கழிவுநீர் வாறுகால்கள் மண்மேவி அடைபட்டு கிடக்கிறது. துடியாண்டி அம்மன் கோவில் தெருவில் இருந்து மாதா கோவில் தெருவிற்கு செல்லும்பாலம் சேதம் அடைந்தும், அசுத்தமாகவும் காணப்படுகிறது.

பஸ் ஸ்டாண்டின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் சுகாதாரக் கேடு அதிக அளவில் காணப்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் மேற்கு பகுதியில் உள்ள வாறுகால்களில் கழிவுநீர் அடிக்கடி தேங்கி வழிந்து ரோட்டில் செல்வதால் பஜார் வீதியில் மக்கள் நடக்க முடியவில்லை.

பள்ளிவாசலில் இருந்து குரங்கு பாலம் வரை பஜார் வீதியில் இருபுறமும் மாறுகால்கள் முழு அளவில் நடைபெற்று கிடைப்பதால் மழை பெய்தால் தகுதி ஏற்பட்டு சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.






      Dinamalar
      Follow us