ADDED : பிப் 23, 2024 05:33 AM

விருதுநகர் : பட்டதாரி அல்லாதவர்களுக்கு பணி பாதுகாப்பு அரசாணை, உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற அலுவலர்கள் வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டதலைவர் கோதண்டராமன் தலைமை வகித்தார். செயலாளர் பொன்ராஜ், வளாக கிளை தலைவர் ராணி முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட 10 தாலுகா அலுவலகங்களில் இந்த காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டம் காரணமாக வருவாய் அலுவலர்களுக்கு நடத்தப்பட இருந்த பணித்திறன் ஆய்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இன்று(பிப். 23) காத்திருப்பு போராட்டம் தொடரும். கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் பிப்.27 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.