/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தபால் அலுவலகங்களில் ஆதார் திருத்தம்
/
தபால் அலுவலகங்களில் ஆதார் திருத்தம்
ADDED : டிச 18, 2025 05:49 AM
விருதுநகர்: விருதுநகர் கோட்டத்திற்கு உட்பட்ட தபால் அலுவலகங்களில் ஆதார் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விருதுநகர் கோட்டத்தில் அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம் மற்றும் விருதுநகர் தலைமை தபால் அலுவலகத்தில் காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை ஆதார் சேவை மையம் செயல்படுகிறது. 30 துணை தபால் அலுவலகங்களிலும் சேவை மையங்கள் செயல்படுகின்றன.
மாவட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண் காணிப்பாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:
தமிழக அஞ்சல் வட்டம், பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து மாநிலம் முழுதும் 5 முதல் 7 வரை, 15 முதல் 17 வரை வயதுடைய மாணவர் களுக்கு ஆதாரில் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்புக்கான சிறப்பு முகாம்கள் நடத்துகிறது.
பள்ளி மாணவர்கள், கிசான் திட்டப் பயனாளிகள், பத்து ஆண்டுகளாக ஆதாரை புதுப்பிக்காதோர் அடையாளச் சான்று, முகவரி ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதுப்பிக்க வேண்டும் என்றார்.

