தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விபத்தை ஏற்படுத்தும் பேரி கார்டுகள்

 விபத்தை ஏற்படுத்தும் பேரி கார்டுகள்

 விபத்தை ஏற்படுத்தும் பேரி கார்டுகள்


ADDED : மார் 15, 2026 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சுழி: திருச்சுழி அருகே சாயல்குடி ரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

திருச்சுழி அருகே எம். ரெட்டியபட்டி வழியாக சாயல்குடி செல்லும் ரோடு உள்ளது. இந்த ரோடு வாகனங்கள் வந்து செல்ல வசதியாக அகலபடுத்தி போடப்பட்டுள்ளது. மண்டபசாலை அருகில் இந்த ரோட்டின் குறுக்கே இரண்டு பேரி கார்டு வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகனங்கள் வந்து செல்லும்போது பேரி கார்டுகளில் மோதி விபத்துக்கள் ஏற்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு டூவீலர்களில் சென்ற இருவர் பேரிகார்டு அருகில் தடுமாறி எதிரே வந்த மற்றொரு டூவீலர் உடன் மோதியதில் மூவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பேரிகார்டு இல்லாமல் இருந்தால் வாகனங்கள் ரோட்டில் விலகிச் சென்று இருக்கும்.

நேராக உள்ள இந்த ரோட்டில் இரு பக்கமும் வாகனங்கள் வந்து செல்ல வசதியாக இருந்தும், ரோட்டின் குறுக்கே தேவை இல்லாமல் பேரிகார்டுகளை வைத்து விபத்திற்கு வழி வகுக்குகின்றனர். இதனால், தொடர்ந்து விபத்து ஏற்படுகிறது. எம்.ரெட்டியபட்டி போலீசார் இந்தப் பகுதியில் உள்ள பேரிகார்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us